ஈரோடு: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீரானது ஒரு லட்சம் கன அடியைத் தாண்டி உள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சிக்கு உட்பட்ட காவிரி கரையோரப் பகுதியான கந்தன் பட்டறை, கீரைக்காரர் தெரு, பாலக்கரை உள்ளிட்டப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் வசித்த பொதுமக்களை அரசுப்பள்ளிகளில் ஏற்படுத்தபட்டுள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.