தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து நான்கு வயது சிறுமி உயிரிழப்பு - karungalpalayam erode

ஈரோடு: மாநகராட்சி சார்பில் சாக்கடை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழியால் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

4 year old girl died
House compound wall accident

By

Published : Jun 9, 2020, 4:43 PM IST

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கக்கன் நகரைச் சேர்ந்த பிரேம்குமார், ராகனி தம்பதியருக்கு ஜீவித்குமார் என்ற மகனும், ருத்ரபிரியா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் வீட்டின் சுற்றுச்சுவர் அருகே மாகராட்சியின் சார்பில் சாக்கடை அமைக்க ஆழமாகப் பள்ளம் தோண்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று (ஜூன் 08) இரவு குழந்தைகள் இருவரும் தடுப்புச் சுவர் அருகே நின்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து விழுந்ததில் ருத்ரபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஜீவித்குமாருக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து நான்கு வயது சிறுமி உயிரிழப்பு

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கருங்கல்பாளையம் காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சாதி வெறியாட்டம்: காதலை எதிர்த்துக் கத்திப்பிடித்த 17 வயது சிறுவன்!

ABOUT THE AUTHOR

...view details