தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாடியிலிருந்து குதித்து விடுதி உரிமையாளர் தற்கொலை! - erode latest news

ஈரோடு: மேட்டூர் நெடுஞ்சாலை அருகே தங்கும் விடுதி உரிமையாளர் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

erode

By

Published : Oct 11, 2019, 3:07 PM IST

ஈரோடு மாவட்டம் மேட்டூர் நெடுஞ்சாலையில் அமைத்துள்ளது ஈஸ்வரன் தங்கும் விடுதி, இதன் உரிமையாளர் குணசேகரன். இவர் இன்று அதிகாலை தனது தங்கும் விடுதியின் மூன்றாவது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த விடுதியின் ஊழியர்கள் உடனே ஈரோடு மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அங்கு விரைந்த காவல் துறையினர் அவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்து றையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

உடலை கைப்பற்றியபோது

இதையும் படிங்க:

பணியில் சேர்ந்து 18 நாட்களில் தபால்துறை பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details