தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி ஆற்றில் வெள்ளம்- புனித நீராட தடை

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், பரிகாரங்கள் செய்யவும் கோயில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் புனித நீராட தடை!
காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் புனித நீராட தடை!

By

Published : Oct 17, 2022, 9:31 PM IST

ஈரோடு:பவானியில் தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறை உள்ளது. இங்கு பவானி, காவிரி, அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிக்கின்றன. அம்மாவாசை, பௌர்ணமி மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து புனித நீராடி பரிகாரங்கள் செய்து சங்கமேஸ்வரர் வேதநாயகியை வழிபட்டுச் செல்வது வழக்கம்.

தற்போது காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பவானி கூடுதுறை தீவு போல் காட்சியளிக்கிறது. மேலும் பவானி, குமாரபாளையம், காளிங்கராயன் பாளையம் பகுதிகளின் இருபுறக்கரைகளையும் தொட்டவாறு காவிரி, பவானி ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.

இதனால் பவானி கூடுதுறையில் உள்ள பரிகார மண்டபங்களை காவிரி ஆற்று நீர் மூழ்கியடித்தவாறு சென்று கொண்டுள்ளது. இங்குள்ள படிக்கட்டுகளை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி புனித நீராடவும், பரிகார மண்டபங்களில் பரிகாரங்கள் செய்யவும் கோவில் நிர்வாகம் சார்பில் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் புனித நீராட தடை!

இதனால் பவானி கூடுதுறையில் உள்ள பரிகார மண்டபங்கள், புனித நீராடும் இடங்கள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதையும் படிங்க:புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 76 காலிப்பணியிடங்கள்...

ABOUT THE AUTHOR

...view details