ஈரோடு மாவட்டம் காளமங்கலம் குலவிளக்கம்மன் கோயிலின் முன்பக்க கதவில் பெரியார், அண்ணா, அன்னை தெரசா ஆகியோரின் படங்கள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கோயிலிலிருந்து பெரியார், அண்ணா படங்களை அகற்றக்கோரி மனு! - இந்து மக்கள் கட்சி நிர்வாகி
ஈரோடு: கோயில் கதவில் உள்ள பெரியார், அண்ணா படங்களை அகற்ற வலியுறுத்தி மண்வெட்டி, கடப்பாறையுடன் வந்து இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் நூதனமுறையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இந்தப் படங்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி நிர்வாகி பிரகாஷ் மண்வெட்டி, கடப்பாறையுடன் வந்து நூதனமுறையில் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். மேலும் அந்தப் படங்களுக்கு பதிலாக சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்சின்னமலை, பொல்லான், காளிங்கராயன் படங்களை அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
பெரியார், அண்ணா படங்களை உடனடியாக அகற்றாவிட்டால் பக்தர்கள் கரசேவையில் ஈடுபட்டு படங்களை அகற்ற நேரிடும் எனவும் இந்து மக்கள் கட்சி நிர்வாகி எச்சரிக்கைவிடுத்தார்.