தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாளவாடியில் ஆர்வத்துடன் வாக்களித்த மலைவாழ் மக்கள் - voted for the Talavadi

ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாளவாடி, மல்லன்குழி உள்ளிட்ட பகுதிகளில் மழைவாழ் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கினைப் பதிவுசெய்துவருகின்றனர்.

talavadi
talavadi

By

Published : Dec 27, 2019, 11:47 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 75 வாக்குச்சாவடிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள தாளவாடி, மல்லன்குழி, திகினாரை, பையனாபுரம், இக்கலூர், நெய்தாளபுரம், தலமலை, ஆசனூர், கேர்மாளம், திங்களுர் ஆகிய 10 கிராம ஊராட்சிகளில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், கிராம வார்டு உறுப்பினர் என 101 பதவிகளுக்கு 296 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் 1 மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 6 பேரும், 10 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கு 40 பேரும், 10 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 46 பேரும், 80 கிராம வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 204 பேரும் போட்டியிடுகின்றனர்.

ஆர்வத்துடன் வாக்களித்த மலைவாழ் மக்கள்

இதில் தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில் மலைவாழ் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க...

உடனுக்குடன்: உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்

ABOUT THE AUTHOR

...view details