தமிழ்நாடு நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியாளர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் வைரவன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், சாலைப் பணியாளர்களை நிரந்தமாக்கி அரசு ஊழியர்களைப் போல ஊதியம் வழங்க வேண்டும், விபத்து படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைரவன், "சாலைப் பணியாளர்களின் பணிநீக்க காலமான 41 மாத ஊதியத்தை ஓய்வுப் பலனில் இணைக்க வேண்டும். சாலைப் பராமரிப்புப் பணிகளைத் தனியாருக்கு வழங்கக் கூடாது. அரேச பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.