திருப்பூர் மாவட்டம் புதிய புகளூரில் இருந்து ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் வரை 800 கே.வி மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாய விளைநிலங்கள் வழியாக மின் பாதை கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
மேலும், உயர்மின் கோபுரங்கள் செல்லும் வழித்தடத்தில் உயர் அழுத்த மின்சாரம் செல்வதால், மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. மின் பாதையின் கீழ் எந்தவித மின் இணைப்பும் இல்லாமல் மின்விளக்குகள் எரிவதையும் விவாயிகள் செயல்முறை விளக்கத்துடன் சென்னை நீதிமன்றத்தில் சமர்பித்து மின் கோபுரம் அமைப்பதற்கு தடைகேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.