தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முழு ஊரடங்கு: ஈரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்! - போக்குவரத்து நெரிசல்

ஈரோடு: கரோனா ஊரடங்கு உத்தரவை மீறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

heavy traffic in erode ps park signal
ஈரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்

By

Published : May 10, 2021, 4:19 PM IST

கரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, இன்று (மே.10) முதல் மே 24ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஊரடங்கு உத்தரவை மீறி ஈரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் மையப் பகுதிகளான பன்னீர்செல்வம் பூங்கா, ஜி.எச். ரவுண்டானா, பெருந்துறை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக, 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ரெம்டெசிவிர் மருந்து வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்

ABOUT THE AUTHOR

...view details