சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அப்பகுதி குளிர்ந்து இதமான கால நிலை நிலவுகிறது. இந்நிலையில், திம்பம் மலைப்பாதையில் இன்று காலை முதலே கடும் பனி மூட்டம் நிலவியது.
27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இம்மலைப்பாதையில், 20ஆவது கொண்டை ஊசி வளைவு வரை எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை மெதுவாக இயக்கினர்.