ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (நவ.4) இரவு கனமழை பெய்தது.
இதனால் அயலூர், செம்மாண்டம்பாளையம், நாகர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் நிரம்பியதால் கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கீரிப்பள்ளம் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட வண்டிப்பேட்டை, வாஸ்துநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பல்வேறு இடங்களில் மழைநீரால் சாக்கடை அடைப்பினால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் தடப்பள்ளி பாசன வாய்க்காலில் மழைநீர் பெருகி அருகே இருந்த வயல்களில் புகுந்ததால் நெற்பயிர்கள் முழுவதும் நாசமாகின.
இதையும் படிங்க: பொழிச்சலூர் ஊராட்சி அலுவலகம் முன்பு தேங்கி நிற்கும் மழை நீர்