தமிழ்நாடு - கர்நாடகாவை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேவுள்ள புதுக்குய்யனூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அப்பகுதியில் வாகனப் போக்குவரத்திற்காக புதிய பாலம் கட்டும் பகுதியில் தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றிரவு (செப்டம்பர் 4) திம்பம் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால், வனப்பகுதி வழியாக வரும் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.