ஈரோடு:வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையமானது அறிவித்தது. அதன்படி ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
குறிப்பாக ஈரோடு நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று (அக். 20) நள்ளிரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக ஈரோடு ரங்கம்பாளையம், அன்னை சத்யா நகர், முத்தம்பாளையம், மூலப்பாளையம், சேனாதிபதிபாளையம், செட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்து உள்ளது.
நள்ளிரவில் வீடுகளில் புகுந்த மழைநீர் காரணமாக வீடுகளில் அனைத்து பொருட்களும் சேதமாகி உள்ளன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல அப்பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களிலும் மழைநீர் புகுந்து உள்ளதால் தீபாவளி விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பொருட்களும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வருவாய்த் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது பாதுகாப்பான இடங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
வீடுகளில் புகுந்தது மழைநீர் இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மின் கட்டண மோசடி.. டிஜிபி எச்சரிக்கை..