ஈரோடு:அந்தியூர், பர்கூர் பகுதிகளில் நான்காவது நாளாக நள்ளிரவு நேரங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதில் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் மலைப்பகுதி சாலையில், நெய்க்கரை பகுதியிலிருந்து செட்டிநொடி வரை சுமார் ஒன்றரை (1.1/ 2) கிலோ மீட்டர் தூரம் வரை மலைப்பகுதி ரோட்டில் மண் சரிந்து விழுந்துள்ளது.
இதில் மண், மரங்கள் மற்றும் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்து கிடக்கின்றன. இதனால் நேற்று இரவு 10 மணி முதல் அந்தியூரில் இருந்து பர்கூர், கர்கேகண்டி, ராமாபுரம், கர்நாடகா மாநிலம் செல்லும் அனைத்து போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் 200க்கும் மேற்பட்ட போக்குவரத்து வாகனங்கள் வரட்டுப்பள்ளம் வனச்சோதனை சாவடி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மலைப்பகுதியில் உள்ள 33 மலைக்கிராமங்களுக்கும் செல்லும் போக்குவரத்து கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மண் சரிவை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட உள்ளனர்.
பர்கூர் மலைப்பகுதியில் கனமழை இதையும் படிங்க: 16 வயது சிறுமியை 4 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்வதவருக்கு 20 ஆண்டுகள் சிறை