தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்தியமங்கலத்தில் கனமழை - 5000 வாழை மரங்கள் சேதம் - சத்தியமங்கலத்தில் கன மழை

ஈரோடு: சத்தியமங்கலத்தில் பெய்த கன மழையால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

கன மழையால் முறிந்து சேதமடைந்த வாழை மரங்கள்

By

Published : Oct 2, 2019, 7:53 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பலத்த சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக வரதம்பாளையம் பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

கனமழையால் முறிந்து சேதமடைந்த வாழை மரங்கள்

அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால் சுமார் 25 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாடு அரசு கனமழையால் ஏற்பட்ட பாதிப்புக்கு உதவி செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details