ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து குளிர்ந்த காற்று வீசியதால் மழை பெய்யத் தொடங்கியது.
கனமழையால் வணிக நிறுவனங்கள் பாதிப்பு! - erode heavy rain falls
ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருமணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால், வணிக நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளது.

தொடர்ந்து பெய்த கனமழை
ஒருமணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழை.
அரைமணி நேரம் லேசாக பெய்யத்தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது, இதனால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது.
ஒருமணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் மழையில் சிக்கிக்கொண்டனர்.
கனமழை பெய்து வந்ததையொட்டி சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.