ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. இதனால் தலமலை, சிக்கள்ளி, தொட்டபுரம் பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளநீர் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றதால் தலமலை-தாளவாடி இடையே இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெள்ளத்தில் மரம், செடி, கொடிகளுடன் உயிரினங்களும் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். வெள்ளநீரில் ஆபத்தான பயணம் வேண்டாம் என எச்சரிக்கப்பட்டதால் காய்கறி வாகனங்கள், பள்ளி வாகனங்கள் தண்ணீர் வடியும்வரை காத்திருந்தன. சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு வெள்ளநீர் மெள்ள மெள்ள வடியத் தொடங்கியது.