ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் அப்பகுதியானது மிகவும் குளிர்ந்து இதமான கால நிலை நிலவுகிறது. திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்நிலையில்,ஆசனூரில் காலை முதலே கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது.
இதனால் திம்பம் வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளில் 20ஆவது வளைவு வரை, வாகனங்கள் தெரியாதபடி பனிமூட்டமாக உள்ளது. ஆகையால், மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை மித வேகத்தில் வாகன ஓட்டிகள் இயக்கியதால், தமிழ்நாடு - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.