ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் மலைக்கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் கடுமையான பனிமூட்டம் நிலவியது.
எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி பனிமூட்டம் நிலவியதால் லாரிகள், பேருந்துகள் மஞ்சள் விளக்குகளை எரியவிட்டபடி இயங்கின.
இந்நிலையில் மைசூரில் இருந்து திண்டுகல்லுக்கு பேப்பர் பாரம் ஏற்றிய லாரி, ஆசனூர் வழியாக சென்று கொண்டிருந்தது.
சாலையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக லாரி சாலையோர மண்குழியில் இறங்கியது.
சாலையோரம் இறங்கிய லாரி மீட்பு பின்னர் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு பனி விலகிய பிறகு மீட்பு பணி நடைபெற்றது. சுமார் 2 மணி நேரத்துக்கு பின் லாரி மீட்கப்ட்டது. கடும் பனி மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு போக்குவரத்து காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:ஆடுமேய்க்க சென்றவரைப் பிடித்து தாக்கிய காவலர் - பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் முற்றுகைப்போராட்டம்