ஈரோடு:கடந்த சில நாட்களாக கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம், குரும்பூர், அருகியம் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் ஓடைகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, அருகியம் மற்றும் குரும்பூர் பள்ளங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இவ்வாறு செந்நிறத்தில் ஓடும் வெள்ள நீரில், இரு சக்கர வாகனம் கூட இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் காய்கறி லாரிகள் மேலும் செல்ல முடியாமல் திரும்பி வந்தன. அதேபோல் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்து ரத்து செய்யப்பட்டது. மேலும் மாக்கம்பாளையத்தில் விளைந்த காய்கறிகள் சந்தைப்படுத்த முடியாமல் அங்யேயே முடங்கியுள்ளன.