ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையில் அப்பகுதியைச் சேர்ந்த தனலெட்சுமி, ரங்கம்மாள், பச்சமுத்து ஆகியோரின் வீடுகள் இடிந்து விழுந்து சேதமைடந்தது.
கனமழைக்கு 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்! - Heavy downpour in Sathyamangalam
ஈரோடு: சத்தியமங்கலத்தில் பெய்த கனமழை காரணமாக மூன்று வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
சேதமடைந்த வீடுகளை பார்வையிடும் கிராம நிர்வாக அலுவலர்
மேலும் ஒருசில வீடுகளில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் தவசியப்பன், இடிந்து விழுந்த வீடுகளைப் பார்வையிட்டார்.