தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருப்புப் பட்டை அணிந்து சுகாதார ஆய்வாளர்கள் போராட்டம்! - Erode District News

ஈரோடு: திருத்துறைப்பூண்டி சுகாதார ஆய்வாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஈரோடு மாவட்ட சுகாதார ஆய்வாளர்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்புப் பட்டை அணிந்து சுகாதார ஆய்வாளர்கள் போராட்டம்
கருப்புப் பட்டை அணிந்து சுகாதார ஆய்வாளர்கள் போராட்டம்

By

Published : May 11, 2020, 10:56 PM IST

கரோனா நோய்த் தடுப்புப் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மக்கள் பணியாற்றிக் கொண்டிருந்த சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் மீது சிலர் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள்
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இத்தாக்குதலைக் கண்டித்து ஈரோடு சுகாதார ஆய்வாளர்கள் கருப்புப் பட்டை அணிந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது தமிழ்நாடு முழுவதும் மக்கள் பணியாற்றிடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் எனவும், கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து வெளிப்படையாக தெரிவித்திட வேண்டும் என்றும் போராட்டத்தின்போது சுகாதார ஆய்வாளர்கள் குரல் எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details