கரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துதற்கான நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து கர்நாடக வந்த இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே ஒமைக்ரான் தொற்று பரவுவதை தடுக்க இரு மாநில எல்லையில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக கர்நாடகாவில் இருந்து தாளவாடிக்கு வரும் வாகனங்களை சுகாதாரதுறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.