வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க சிறப்பு பூஜை செய்த ஆசனூர் பழங்குடியினர்! ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் மலைக்கிராமத்தில் வாழும் மக்களை புலி, யானைகளிடமிருந்து மக்களை காப்பாற்றவும் விவசாயம் செழிக்கவும் ஸ்ரீ கும்பேஸ்வரர் சுவாமி கோயிலில் பழங்குடியின மக்கள் புலி, யானை பொம்மைகளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து, தேர் இழுத்து இன்று (பிப்.10) வழிபட்டனர்.
வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க சிறப்பு பூஜை செய்த ஆசனூர் பழங்குடியினர்! சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூரில் மலைக்கிராமத்தில் ஸ்ரீ கும்பேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலை சுற்றிலும் வாழும் மக்கள் விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்டுள்ளனர். அடர்ந்த காட்டுப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்தில் விவசாயம் செழிக்கவும் யானை, புலி ஆகிய விலங்குகளிடமிருந்து மக்களை பாதுகாத்து அருள்புரிய வேண்டியும் விரதம் இருந்து இக்கோயில் திருவிழா தொடங்கியது.
வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க சிறப்பு பூஜை செய்த ஆசனூர் பழங்குடியினர்! இந்த விழாவையொட்டி, சித்தூர் கும்பேஸ்வரசுவாமி, ஆலமலை பிரம்மதீஸ்வரர் ஆகிய சுவாமிகளை அழைத்து வருதல் நிகழ்ச்சியும் பக்தர்கள் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, புலி வாகனம் மற்றும் யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.
பின்னர் ஸ்ரீ கும்பேஸ்வரர் சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேருக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தேருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து கோயில் முன்பு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது மலைக்கிராம மக்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த தானியங்கள் மற்றும் பழங்களை தேரின் மீது வீசி நேர்த்திக் கடன் செலுத்தினர். இங்குள்ள மலைக்கிராமத்தில் மக்கள் விவசாயம் செய்துவருவதால் யானை, புலி ஆகிய விலங்குகளிடமிருந்து இந்த சாமி மக்களைக் காத்து அருள்வதாக நம்பிக்கை தெரிவித்தனர். இந்த திருவிழாவில் ஆசனூர் ஒங்கல்வாடி, அரேபாளையம், மாவள்ளம், தேவர்நத்தம், கேர்மாளம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: RSS: காவி பேரணிக்கு கடும் நிபந்தனைகளுடன் பச்சைக்கொடி!