ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த நல்லூர் தேசிபாளையம் பிரிவில், சாலையோரம் உள்ள வேப்பமரத்தின் உச்சிக் கிளையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த புன்செய் புளியம்பட்டி காவல் துறையினர், காக்கி உடை அணிந்திருந்த சடலத்தை மீட்டு இது குறித்து விசாரணை செய்துவருகின்றனர்.
வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவரின் சடலம் சாலையோரம் நடந்த இச்சம்பவத்தால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அதிகளவில் குவிந்ததால் அவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.
மேலும், இறந்தவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:ரயில் உயர்மின் அழுத்த கம்பியில் தொங்கிய இளைஞர் மீட்பு!