தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தவறவிட்ட தங்க செயினை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையின் நாயகர்கள்! - Erode Gold Chain News

சென்னையில் தங்கும் விடுதியில் தவறவிட்ட தங்கசெயினை உரிமையாளரிடம் ஒப்படைத்த சத்தியமங்கலம் வியாபாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஈரோட்டில் ஐம்பதாயிரம் மதிப்பிலான தங்க செயின் உரிய பெண்ணிடம் ஒப்படைப்பு
ஈரோட்டில் ஐம்பதாயிரம் மதிப்பிலான தங்க செயின் உரிய பெண்ணிடம் ஒப்படைப்பு

By

Published : Feb 4, 2023, 10:53 PM IST

ஈரோடு:சத்தியமங்கலம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த ஜவஹர், ரமேஷ் ஆகியோர் சென்னையில் தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர். அவர்கள் விடுதி அறையை காலி செய்தபோது, அங்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயின் கிடப்பது தெரியவந்தது.

அதனை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அதற்கு முன்பாக அந்த அறையில் தங்கியிருந்த நபரின் செல்போன் எண்ணைக் கேட்டுப் பெற்றுள்ளார். பின்னர், ஜவஹர், ரமேஷ் ஆகிய இருவரும் சத்தியமங்கலம் வந்தனர். அப்போது, அந்த அறையில் அமெரிக்காவில் பணியாற்றும் ரத்தினம் சுப்பிரமணியம் பெண் மருத்துவர் தங்கியிருந்ததும் அவர் தங்க செயினை தவறவிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவர் ரத்தினம் சுப்பிரமணியம் சென்னையிலிருந்து சத்தியமங்கலம் வந்து உரிய அடையாளங்களை காண்பித்துத் தங்க செயினை பெற்றுச்சென்றார். அமெரிக்காவில் பணியாற்றும் பெண் மருத்துவர் ரத்தினம் சென்னையில் வசிக்கும் பெற்றோரைப் பார்க்க வந்தபோது தங்கும் விடுதியில் ஓய்வெடுத்தபோது சங்கிலியைத் தவறவிட்டதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details