ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்தவர் சி.கதிரவன். இவர் சேலம் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தேனி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாவட்டத்தின் 34 ஆவது ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இவர் ஏற்கனவே 2016ஆம் ஆண்டில் கோபிச்செட்டிபாளையத்தில் உதவிய ஆட்சியராக பணியாற்றியவர். இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜுன் 16) காலை கோப்புகளில் கையெழுத்திட்டு ஆட்சியராக கிருஷ்ணனுண்ணி பொறுப்பேற்றுக்கொண்டார்.
மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து துறைகளிலும் இருக்கும் குறைபாடுகள், பிரச்னைகள் கண்டறியப்பட்டு அதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் வழங்குவதற்கு அரசு அறிவுறுத்தினால் அனுமதியளிக்கப்படும். ஈரோடு மக்களின் குறைகள், பிரச்னைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக பிரபுசங்கர் பொறுப்பேற்பு!