ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனம் அரசு ஒப்பந்தம், குடிநீர் குழாய் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் அரசு ஒப்பந்தம் எடுத்ததில் சுமார் 450 கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்.டி மோசடி செய்ததற்காக நிறுவனத்தின் உரிமையாளர் அசோக்குமார், கடந்த மாதம் விசாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த ஒன்றாம் தேதி முதல் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள அந்நிறுவன தலைமை அலுவலகம், அசோக்குமாரின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.