தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே நேரத்தில் தண்ணீர் குடிக்க வந்த 30 யானைகள் - Group of elephants in Bhavani Sagar dam

ஈரோடு: பவானிசாகர் அணைப்பகுதியில் யானைகள் வரிசையாகச் சென்று தண்ணீர் குடித்த பின்னர் எதிரே வந்த யானைகளுக்கு வழிவிட்டபடி சென்றன.

Bhavani Sagar dam
Elephants

By

Published : Dec 3, 2020, 10:13 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் வனப்பகுதியில் குளம், குட்டைகள், அணைக்கு வரும் காட்டாறுகள் உள்ளன. இந்தக் காட்டாற்றில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதால் அங்குள்ள யானைகள் இரண்டு கி.மீ. தொலைவுவரை நடந்து பவானிசாகர் அணை நீர்தேக்கப்பகுதிக்கு வருகின்றன.

இந்நிலையில் இன்று (டிச. 03) பவானிசாகர் அணை நீர்தேக்கப் பகுதியான சுஜில்குட்டை என்ற இடத்தில் சுமார் 30 யானைகள் வரிசையாகச் சென்று தண்ணீர் குடித்தன. பின்னர் எதிரே வந்த யானைகளுக்கு வழிவிட்டபடி சென்றன.

யானைகள் கன்றுகளுடன் குடும்பம் குடும்பமாகச் செல்வதைப் பார்த்த அக்கிராம மக்கள் படம் பிடித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details