ஈரோடு: தாளவாடி அடுத்த திகினாரை, நாயக்கர் வீதியைச் சேர்ந்தவர் பசுவநாயக்கர் (65). அவரது மனைவி சிவம்மா (60). இவர்களது பேரன் பத்ரா என்கிற பிரசாத் வியாழக்கிழமை நேற்று (ஜூலை.8) இரவு மதுபோதையில் அவரது தாத்தா வீட்டுக்கு சென்று தாத்தா, பாட்டி ஆகியோரை மதுபோதையில் திட்டினார்.
மேலும், தனது தாயார் நோயால் பாதிக்கப்படுவதற்கு தாத்தா, பாட்டிதான் காரணம் என்றும் செய்வினை வைத்ததாக கூறி இருவரையும் கல்லால் தாக்கியுள்ளார். இருவரும் வலியால் சத்தமிட்டதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவரையும் மீட்டு தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசிச்சைக்காக சேர்த்தனர்.