ஈரோட்டில் தமிழ்நாடு கல்வித் துறை அலுவலகப் பணியாளர் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் சண்முகராஜன், கல்வித் துறையில் நிர்வாக அலுவலர் இணை இயக்குநர், துணை இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்க வேண்டும் எனக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாகக் கூறினார்.
'அரசுத் தேர்வு முறைகேடுகளில் எத்தகைய பெரிய சக்தி ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கை அவசியம்'
ஈரோடு: அரசுத் தேர்வு முறைகேடுகளில் எத்தகைய பெரிய சக்திகள் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க அரசுப் பணியாளர் மாநிலத் தலைவர் சண்முகராஜன் வலியுறுத்தியுள்ளார்.
2019ஆம் ஆண்டு ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறிப்பாணை, பணிநீக்க நடவடிக்கைகள் ஆகியவற்றை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்கள்; அதில் இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறோம் எனக் கூறினார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு மட்டுமன்றி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் அதில் தொடர்புடைய எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு முறைகேடுகள் களையப்பட வேண்டுமென்றும் அதில் ஈடுபட்டு இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சண்முகராஜன் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
TAGGED:
அரசு பணியாளர் சங்கத் தலைவர்