சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்த ஊரடங்கிலும் அவசர கால ஊழியர்களான மருத்துவர்கள், செவிலியர், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத் துறையினர் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு அடுத்துள்ள வில்லரசம்பட்டி போயஸ் கார்டன் பகுதியில் வசித்துவரும் சந்திரசேகர், காளியம்மாள் தம்பதியினர் தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர்களின் கால்களுக்கு பூஜை செய்து, மாலை அணிவித்து மரியாதை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் கலை பண்பாட்டுத் துறை மண்டல அலுவலராக சந்திரசேகர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...கேன்சர் மருந்து கிடைக்காமல் தவித்த தமிழ்நாட்டு நோயாளி; கைகொடுத்த கேரளா!