ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து 20 பேருடன் புறப்பட்ட நகர்ப்புறப் பேருந்து, பிற்பகலில் பண்ணாரி கோயிலைச் சென்றடைந்தது. பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பயணிகளை ஏற்றுவதற்காக ஓட்டுநர் சண்முகம் காத்திருந்தார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்ட அரைமணி நேரத்திலேயே ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. பணியின்போது உயிரிழந்த சண்முகத்தின் குடும்பத்துக்குப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆறுதல் கூறினர்.