தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளப்பெருக்கால் அரசு பேருந்து ரத்து... ஆபத்தான நிலையில் காட்டாற்றை கடக்கும் பள்ளி மாணவர்கள் - காட்டாற்றை கடக்கும் பள்ளி மாணவிகள்

மாக்கம்பாளையம் காட்டாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் 7 நாள்களாக அரசு பேருந்து ரத்து செய்யப்பட்டதால் மிகுந்த சிரமங்களிடையே பள்ளி மாணவிகள் கடம்பூர் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்

வெள்ளப்பெருக்கால் அரசு பேருந்து ரத்து
வெள்ளப்பெருக்கால் அரசு பேருந்து ரத்து

By

Published : Sep 8, 2022, 1:26 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதி மாக்கம்பாளையம் ஊராட்சியில் 750 குடும்பங்கள் வசிக்கின்றன. இக் கிராம மக்கள் தினந்தோறும் தங்களது அன்றாட தேவைகளுக்கு அரசு பேருந்தில் பயணிக்கின்றனர். தினமும் இருமுறை மட்டும் அரசு பேருந்து இயங்குவதால் பேருந்தில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

அதேபோல, மாக்கம்பாளையம், அருகியம், கோம்பைதொட்டியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தினமும் அரசு பேருந்தில் கடம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். தற்போது கடம்பூர் மற்றும் மாக்கம் பாளையம் இடையே ஓடும் அருகியம், குரும்பூர் காட்டாறுகளில் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கால் அரசு பேருந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காட்டாற்று கரையில் சேறும் சகதியுமாக இருப்பதால் பேருந்து இயக்கமுடியாத சூழ்நிலையால் பேருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் தெவித்தனர். இதனால் மாக்கம்பாளையத்தில் இருந்து 20 கிமீ தூரத்தில் உள்ள கடம்பூர் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் வாடகை டெம்போவில் அருகியம் வந்து சேருகின்றனர்.

வெள்ளப்பெருக்கால் அரசு பேருந்து ரத்து

அங்கிருந்து அருகியம் காட்டாற்றை ஆபத்தான முறையில் கடக்கும் பள்ளி மாணவிகள் எதிர்புறம் காத்திருக்கும் அரசு பேருந்தில் ஏறி பள்ளிக்கு செல்கின்றனர். தினந்தோறும் மிகுந்த சிரமங்களிடையே பள்ளிக்கு செல்லும் மாணவிகள் நலன் கருதி அருகியம், குரும்பூர் பள்ளங்களில் படிந்துள்ள சேற்றை தூர்வாரி, காட்டாற்றில் கற்கள் நிரப்பி பேருந்து செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பவானி நகரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

ABOUT THE AUTHOR

...view details