தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திம்பம் மலைப்பாதையில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து - திம்பம்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

திம்பம் மலைப்பாதையில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து

By

Published : Apr 1, 2019, 7:50 PM IST

சத்தியமங்கலம்தாளவாடி மலைப்பகுதியில் இருந்து சுமார் 50 பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பேருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரோடுநோக்கி சென்று கொண்டிருந்தது. அரசு பேருந்தை ஓட்டுநர் சரவணகுமார் ஓட்டினார். நடத்துனர் லட்சுமண குமார் உடன் இருந்தார்.

இந்த பேருந்து பத்தாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்பகுதி லாரியின் பக்கவாட்டின் மீது மோதியது.

இதில் பேருந்தின்முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில்பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்திருந்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


ABOUT THE AUTHOR

...view details