தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூக வலைதளத்தில் வைரலாகும் பாலியல் குற்றச்சாட்டு; அரசு பள்ளி ஆசிரியரை முற்றுகையிட்ட பெற்றோர்! - அரசு பள்ளி ஆசிரியரை பெற்றோர்கள் முற்றுகை

சமூக வலைதளத்தில் வைரலாகும் பாலியல் குற்றச்சாட்டால் அரசு பள்ளி ஆசிரியரை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலியல் குற்றச்சாட்டு
பாலியல் குற்றச்சாட்டு

By

Published : Nov 22, 2021, 5:24 PM IST

ஈரோடு:அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர் மீது பழைய மாணவர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் உத்தரவிட்டார். அதன்பேரில் காவல் துறையினர் அப்பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.

பாலியல் குற்றச்சாட்டு

விசாரணையில், பழைய மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று தெரிய வந்துள்ளது.

இதுபற்றி அறிந்ததும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் அங்கு திரண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியரை முற்றுகையிட்டனர். பின்னர் உயர் அலுவலர்களின் பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:பேருந்தை அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவர்கள்: இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details