தமிழ்நாடு

tamil nadu

குறைந்த கட்டணத்தில் அரசு குளிர்சாதன பேருந்து

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்திலிருந்து மதுரைக்கு குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் அரசு குளிர்சாதனப் பேருந்து பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

By

Published : Mar 18, 2020, 11:29 PM IST

Published : Mar 18, 2020, 11:29 PM IST

அரசு குளிர்சாதனப்பேருந்து
அரசு குளிர்சாதனப்பேருந்து

தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு போக்குவரத்துக் கிளை அலுவலகத்திற்கும் குளிர்சாதன பேருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் கோபிசெட்டிபாளையம் அரசு போக்குவரத்துக்கழக கிளைக்கு இரண்டு குளிர்சாதனப் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரு பேருந்துகளும் கோபிசெட்டிபாளைத்திலிருந்து, திருப்பூர் வழியாக மதுரைக்கு இயக்கப்படுகிறது. முதல்முறையாக இயக்கப்படும் குளிர்சாதனப் பேருந்துகளில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

தனியார் பேருந்து போல் காட்சியளிக்கும் அரசு குளிர்சாதனப்பேருந்து

இந்தப் பேருந்துகளில் வசதியான இருக்கைகள், ஆடியோ சிஸ்டம், ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனி குளிரூட்டு கருவி, இருக்கைக்கு மேலே தனித்தனி விளக்குகள் மற்றும் ஒவ்வொரு இருக்கைக்கு அருகில் செல்போன் ரீசார்ஜ் செய்துகொள்ளும் வசதி, கம்பளத்திலான தரை தளம் என தனியார் பேருந்துகளுக்கு மேலாக அதிகளவு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த குளிர்சாதனப்பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.15 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர் பயணிகள் பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு ரூபாய் வீதம் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் குறைந்த செலவில் அதிக தூரம் குளிர்சாதனப் பேருத்துவில் பயணிகள் பயணம் செய்ய முடிகிறது.

அதுபோல், கோபிசெட்டிபாளைத்திலிருந்து மதுரைக்கு ரூ.266, திருப்பூருக்கு ரூ.52 என குறைந்த அளவில் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் கோபிசெட்டிபாளையத்திலிருந்து திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் அதிகளவு பயணிக்கின்றனர்.

மேலும், கோபிசெட்டிபாளைத்திலிருந்து காலை 4.50க்கும், மாலை 8.55க்கும் திருப்பூர் வழியாக மதுரைக்கு இயக்கப்படுகிறது. பின்னர், மதுரையிலிருந்து கோபிசெட்டிபாளைத்திற்கு காலை 11.35க்கும், மாலை 4 மணிக்கும் இயக்கப்படுகிறது. தொடர்ந்து, காலை 5.20க்கும் மாலை 5.50க்கும் கோபிசெட்டிபாளைம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூருக்கு இந்த குளிர்சாதனப்பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தற்போது கோடை நெருங்கும் நிலை உள்ளதால் நடுத்தரவர்கத்தினரும், கூலித்தொழிலாளிகளும் குளிர்சாதனப்பேருந்தில் குறைந்த செலவில் பயணிக்க நல்லதொரு வாய்ப்பை அரசு போக்குவரத்துக் கழகத்தினர் செய்திருப்பதால், பொதுமக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க:விரைவில் வருகிறது கடற்படையில் பெண்களுக்கான ஆணையம்!

ABOUT THE AUTHOR

...view details