தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட அரசு அலுவலர் பயிற்சி நிலையம் - Corona treatment centre

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிப்பால், பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது.

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்
பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்

By

Published : Jun 8, 2021, 7:08 PM IST

ஈரோடு: கடந்த ஒரு வார காலமாக ஈரோடு மாவட்டத்தில் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1,600லிருந்து 1,800 வரை ஒரே அளவில் நீடிக்கிறது.

இதன் காரணமாக கரோனா தனிமைப்படுத்துதல் மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தற்போது கூடுதலாக பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு, 172 நோயாளிகள் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்
கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட அரசு அலுவலர் பயிற்சி நிலையம்

இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்துதல் மையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட 14 ஆயிரத்து, 712 பேர் மருத்துவமனைகள், தனிமைப்படுத்துதல் மையங்கள், வீட்டு தனிமை உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details