தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் காம்பவுன்ட் சுவர் இடிந்து விபத்து - போராட்டம்!

ஈரோடு வீரப்பன் சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சன்சேடு மற்றும் காம்பவுன்ட் சுவர் இடிந்து விழுந்ததையடுத்து, பள்ளியை சீரமைக்கக் கோரி, பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் காம்பவுன்ட் சுவர் இடிந்து விபத்து - பெற்றோர்கள் போராட்டம்!
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் காம்பவுன்ட் சுவர் இடிந்து விபத்து - பெற்றோர்கள் போராட்டம்!

By

Published : Jul 4, 2022, 6:44 PM IST

ஈரோடு : வீரப்பன் சத்திரம் கிராமத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 400 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். 12 ஆசிரியர்கள் உள்ள இப்பள்ளியில், 2003 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மாணவிகளுடன் பெற்றோரும் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது பள்ளியின் சன்சேடு சுவர் இடிந்து விழுந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை சீரமைக்கக் கோரி பள்ளியின் முன்பு அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் காம்பவுன்ட் சுவர் இடிந்து விபத்து - பெற்றோர்கள் போராட்டம்!

மேலும், ‘விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளியின் காம்பவுன்ட் சுவர், சமையல் அறை கூடம், வகுப்பறை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படத்த வேண்டும்" என வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:எம்.இ, எம்டெக், எம்ஆர்க் மாணவர் சேர்க்கை - ஆகஸ்ட் 3 ஆம் வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details