தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லஞ்சம் வாங்கிய அரசு அலுவலக ஊழியர்... கையும் களவுமாக கைது! - லஞ்சம்

ஈரோடு : இறப்பு சான்றிதழ் வழங்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியர் அலுவலக ஊழியர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்சம் வாங்கிய அரசு அலுவலக ஊழியர் கையும் களவுமாக கைது
லஞ்சம் வாங்கிய அரசு அலுவலக ஊழியர் கையும் களவுமாக கைது

By

Published : Feb 26, 2020, 7:41 AM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள குள்ளம்பாளையத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் தனது மாமனாரின் இறப்பு சான்றிதழுக்காக ஈரோடு கோட்டாட்சியர் அலுவலக உதவியாளரான கணேசனை அணுகியுள்ளார்.

இறப்பு சான்றிதழுக்கு லஞ்சமாக 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார் கணேசன். இதற்கு 3 ஆயிரம் ரூபாய் தருவதாக தெரிவித்த சத்தியமூர்த்தி இது தொடர்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

லஞ்சம் வாங்கிய அரசு அலுவலக ஊழியர் கையும் களவுமாக கைது

இதனையடுத்து கணேசன் லஞ்ச பணம் பெறும்போது அவரை கையும் களவுமாக பிடித்து தீவிர விசாரணைக்கு பின்னர் கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க :ஆவடி அருகே தனியார் கல்லூரி மாணவர் மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details