ஈரோடு:திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதி சேர்ந்தவர் சதீஷ்குமார். மருத்துவரான இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். தன்னுடைய வேலைக்காக இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள கோம்புபள்ளம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இவரது மனைவி கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஊருக்கு சென்ற நிலையில், மருத்துவர் சதீஷ்குமார் வீட்டில் தனியாக இருந்து வந்ததாக தெரிகிறது. இவர் நேற்று வெகு நேரமாகியும் வீட்டிலிருந்து வெளியே வராததால் அக்கம் பக்கத்து வீட்டார் சந்தேகமடைந்து உள்ளனர். அதன் பிறகு இது குறித்து அக்கம் பக்கத்தினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து விரைந்து வந்த அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் மருத்துவர் சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதும், கையில் மருந்து செலுத்தியதற்கான ஊசி இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.