தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு - கர்நாடகா இடையே மீண்டும் அரசு பேருந்துகள் இயக்கம்!

கரோனா தொற்றுப்பரவலையடுத்து தடைவிதிக்கப்பட்ட 117 நாள்களுக்குப் பிறகு, இன்று மீண்டும் தமிழ்நாடு - கர்நாடகா இடையே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாடு - கர்நாடகா இடையே மீண்டும் அரசு பேருந்துகள் இயக்கம்!
தமிழ்நாடு - கர்நாடகா இடையே மீண்டும் அரசு பேருந்துகள் இயக்கம்!

By

Published : Aug 23, 2021, 7:28 PM IST

ஈரோடு: கரோனா தொற்றுப் பரவலையடுத்து கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி முதல், சத்தியமங்கலம் வழியாக கர்நாடகா சென்ற அனைத்து அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து கர்நாடக அரசுப் பேருந்துகள், தமிழ்நாடு வரவும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இரு மாநிலங்களிலும் கரோனா தொற்றுப் பரவல் ஓரளவு குறைந்துள்ளது. இதனையடுத்து இரு மாநிலங்களுக்கிடையேயான அரசு பேருந்து போக்குவரத்தை மீண்டும் தொடங்க, கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதியளித்து உத்தரவிட்டார்.

குறைந்த அளவு பயணிகளுக்கே அனுமதி

அதன்படி சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு, பெங்களூரு, கொள்ளேகால் ஆகிய பகுதிகளுக்கு இன்று (ஆக.23) தமிழ்நாடு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதனையடுத்து சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்த பேருந்துகள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

பேருந்துகள் இயக்கப்பட்ட போதும், கரோனா நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியைக் கடைபிடித்து குறைந்த அளவு பயணிகளே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பேருந்துகள் இயக்கத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி

தொடர்ந்து பயணிகள் கட்டாய முகக்கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டனர். நான்கு மாத காலமாக போக்குவரத்து வசதியின்றி சிரமத்துக்கு உள்ளான நிலையில், மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது தாளவாடி மலைப்பகுதி மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

போக்குவரத்து தொடக்கத்தின் காரணமாக மலைப்பகுதிகளில் விளையும் காய்கறிகளை விற்பனைக்கு எடுத்துச் செல்லவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:காணாமல் போன 4 வயது சிறுவன்... வாட்ஸ்அப் குழு மூலம் 5 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறை

ABOUT THE AUTHOR

...view details