ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தில் முதியவர் ஒருவர் பயணித்தார். அப்போது சில்லறை இல்லை என கூறி அரசு பேருந்து நடத்துனர் குமார், முதியவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான காணொலி காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனைக் கண்ட பலரும் நடத்துனர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.