ஈரோடு: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று (மே 22) அதிகாலை, ஈரோடு நோக்கி அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் சாமிநாதன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பள்ளிபாளையத்தில் சேலம் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதியது.
சென்டர் மீடியனில் மோதிய அரசு பேருந்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் - அரசுப் பேருந்து விபத்து
ஈரோடு நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் உள்பட பேருந்தில் பயணம் செய்த 23 பேர் எவ்வித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதன்பின்னர், போக்குவரத்து மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். மேலும், பேருந்தை கவனக்குறைவாக இயக்கிய ஓட்டுநர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மேலாளர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:4 வயது மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை!