ஈரோடு:கோபிச்செட்டிபாளையம் அடுத்த நிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவரது மனைவி பழனியம்மாள், கடந்த 2018ஆம் ஆண்டு அரசுப்பேருந்து மோதி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து இறந்துபோன பழனியம்மாளின் குடும்பத்தார் கோபிசெட்டிபாளையம் 3ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு நஷ்ட ஈடாக ரூ.7,37,800 தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. மேற்படி நஷ்ட ஈடு தொகையை அரசு போக்குவரத்துக் கழகம் செலுத்த முன்வராததால் கோபிசெட்டிபாளையம் 3ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.