ஈரோடு:சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில், 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று (அக். 1) மாலை சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து தாளவாடி செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது 13 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற அரசு பேருந்து, மைசூரில் இருந்து திருப்பூர் செல்வதற்காக மலைப்பாதையில் எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்திற்குள்ளானது.