ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ராம்நகரில் முகமதுஅலி என்பவர் டீக்கடை நடத்தி வந்தார். இவர் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதற்காக, கடந்த ஒருவாரமாக கடையை திறக்கமால், புதுக்கடை திறப்பு விழா வேலையில் ஈடுபட்டிருந்தார்.
பூட்டிய டீக்கடையில் தீ விபத்து: போலீஸ் விசாரணை! - பூட்டிய டீக்கடையில் தீ விபத்து
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே டீக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில், சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
tea shop
இந்நிலையில், ராம்நகரில் இருந்த டீக்கடையிலிருந்து கரும்புகை வெளியேறுவதை பார்த்த அப்பகுதி மக்கள், கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதுதொடர்பாக கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.