தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா பதுக்கிய வழக்கில் வழக்கறிஞர் உட்பட 3 பேருக்கு குண்டாஸ் - ஈரோடு சோலார் வசந்தம் நகர் கோல்டன் சிட்டி

ஈரோட்டில் வீட்டில் கஞ்சா பதுக்கிய வழக்கில் வழக்கறிஞர் உட்பட 3 பேரை போலீசார், குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கஞ்சா பதுக்கிய வழக்கில் வழக்கறிஞர் உட்பட 3 பேருக்கு குண்டாஸ்
கஞ்சா பதுக்கிய வழக்கில் வழக்கறிஞர் உட்பட 3 பேருக்கு குண்டாஸ்

By

Published : Sep 2, 2022, 7:57 PM IST

ஈரோடு:ஈரோடு சோலார் வசந்தம் நகர், கோல்டன் சிட்டி, ஹரி கார்டனில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி 232.5 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக ஈரோடு அருகே கள்ளியன்காடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான எழில் என்ற எழிலரசன், மாணிக்கம்பாளையம் நேதாஜி நகர் மதன்குமார், இவரது மனைவி கங்கா கெளரி ஆகிய 3 பேரையும் ஈரோடு தாலுகா போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, ஈரோடு எஸ்.பி. சசி மோகன், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதனை ஏற்ற கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதன்பேரில், ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதற்கான உத்தரவு நகலை, ஈரோடு தாலுகா போலீசார் சிறைச்சாலை அலுவலர்களிடம் வழங்கினர்.

இதையும் படிங்க:மருத்துவரிடம் இருந்து ரூ.70 லட்சம் மோசடி - போலி ஐஏஎஸ் அலுவலர் கைது!

ABOUT THE AUTHOR

...view details