தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு அருகே ஆயுதங்களுடன் தப்பியோடிய 3 பேர் - பிடிபட்டவரிடம் போலீசாரிடம் விசாரணை - பிடிபட்டவரிடம் போலீசாரிடம் விசாரணை

கோபிசெட்டிபாளையத்தில் ஆயுதங்களுடன் தப்பியோடிய மூன்று பேரில் ஒருவரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 30, 2022, 4:29 PM IST

ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே காவல் நிலைய பயிற்சி காவல் சார்பு ஆய்வாளர் வெங்கடேஷ் பெருமாள், கோபி, சக்தி ஆகியோர் சாலையில் நேற்று (அக்.29) வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் வந்த இரு சக்கர வாகனத்தைக் காவலர்கள் நிறுத்தியபோது, இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றனர்.

பைக்கில் வந்த மூன்று பேரும், பைக்கை நிறுத்தாமல் அருகில் இருந்த முத்துசா வீதியில் புகுந்து தப்பி ஓட முயற்சித்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களை விரட்டிச்சென்றபோது பைக்கில் இருந்து குதித்த மூன்று பேரும் தப்பியோட முயற்சித்தனர்.

அவர்களை முத்துசா வீதி வழியாக போலீசார் துரத்தி சென்றநிலையில், தனது கையிலிருந்து பையை சாக்கடைக்குள் வீசிச்சென்றனர். அதனை எடுத்துப் பார்த்தபோது அதில் ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து தப்பியோடியர்களில் சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள ஆண்டிகரையைச்சேர்ந்த கனகராஜ் என்பவரை போலீசார் துரத்திப் பிடித்ததைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரைக் கண்டதும் ஓட்டம் பிடித்த மூவரில், ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தப்பியோடிய மூன்று பேரில் ஒருவரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து விசாரணை

இதையும் படிங்க: வயலில் கிடந்த 1 கிலோ ஹெராயின்... மதிப்பு ரூ.7 கோடி... விவசாயி செய்த காரியம்...

ABOUT THE AUTHOR

...view details