ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை வாரம்தோறும் வியாழக்கிழமை கூடுவது வழக்கம். இங்கு கறவை மாடு, எருமை, கன்றுகள், ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இன்று(டிச.24) கூடிய வாரச்சந்தையில் புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
ஐந்து முதல் 10 கிலோ வரையிலான வெள்ளாடுகள், 2 ஆயிரத்து 500 முதல் 5ஆயிரத்து 500 ரூபாய் வரையும், ஐந்து முதல், 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடுகள் 2 ஆயிரத்து 300 முதல், 5ஆயிரம் ரூபாய் வரையும் விலை போனது. மார்கழி மாதம் என்பதால், இறைச்சி கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர்.